Saturday, August 15, 2009

திருவள்ளுவருடன் ஒரு சிறப்பு பேட்டி.

"சுதந்திர தினத்தை முன்னிட்டு எங்கள் வலைப்பூவிற்கு பேட்டியளிக்க முன்வந்த தங்களுக்கு, எங்களது வலைப்பூ மற்றும் வலையுலகின் சார்பாக நன்றியை தெரி வித்துக்கொண்டு பேட்டியை துவங்குகிறேன்". ---( நமது நிருபர்).
" தமிழ் மொழியை வளர்ப்பது எப்படி?"
" அது என்ன ஆடா? அல்லது மாடா? நாம் தீனி போட்டு வளர்ப்பதற்கு!"
" சரி. அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழிதான் சிறந்தது. உங்கள் கருத்து என்ன?"
" உனக்கு எத்தனை மொழி தெரியும்?"
" தமிழும் ஆங்கிலமும்"
" அப்படியா? உனக்கு, உன் மனதில் நினைப்பதை ஆங்கிலத்தில், ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவன் புரியும் வகையில் பேச, எழுத தெரியுமா?"
" ஏதோ சுமாரா, குத்துமதிப்பா தெரியும்."
" அப்படின்னா முழுசாஆங்கிலம் தெரியாது!"
" ஆமாம்"
" தமிழ் மட்டும் தெரிந்த உனக்கு, தமிழ் மொழிதான் சிறந்தது என்று சொல்ல என்ன யோக்கிதை இருக்கு?
" ............................. தமிழ் வளச்சிக்காக நாங்கள் பாடுபடுவதைப் பற்றி என்ன நினைக் கிறீர்கள்?"
" மறுபடியும் முதல் கேள்விக்கே வந்திருக்கிறாய்!. சரி. என்ன பாடுபட்டீர்கள்? சொல் "
" தமிழை மாநிலத்தின் ஆட்சி மொழியாக்கியுள்ளோம். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய சட்டம் கொண்டு வந்துள்ளோம். அரசாங்க பேரூந்துகளில் திரு க்குறளை எழுதியுள்ளோம். தமிழ் அறிஞர்களின் புத்தகங்களை நாட்டுடமையாக் கியுள்ளோம். கல்வி நிலையங்களில், தமிழ் வழி கல்வியை கொண்டு வந்துள் ளோம். உங்களுக்கு பல இடங்களிலும் சிலை வைத்துள்ளோம். சமீபத்தில் 18 வருடமாக பெங்களூரில் திறக்கப்படாமலிருந்த உங்கள் சிலையை சமீபத்தில் திறந்துள்ளோம். இவையெல்லாம் எங்கள் சாதனைகள்."
" உன் பட்டியல் பெரிசாகத்தான் இருக்கிறது. இதனால் எப்படி தமிழ் வளரும் அல்லது வளர்ந்தது என்பதை சொல்ல முடியுமா?".
" எல்லோரும் சொல்கிறார்கள. அதனால்தா...........ன்?"
" நீ குறள் படித்திருக்கிறாயா?"
" நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது திருக்குறள் போட்டிகளில் கலந்து நிறைய பரிசுகள் பெற்றிருக்கிறேன்."
" நல்லது. எப்பொருள் என்று துவங்கும் குறளை சொல்லி அதன் விளக்கத்தையும் சொல்."
" எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. அதாவது எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையை காண்பதுதான் அறிவான் செயல்."
" என்னுடைய குறள் உலக மக்கள் அனைவருக்கும், எக்காலத்திலும் பொருந்தக் கூடிய நல் வழி காட்டும் கருத்துக்களை சொல்லும் நூல். அதைப்படித்திருக்கும் நீ எப்படி மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதை அப்படியே ஏற்றுக்கொண்டாய்?"
" தவறுதாங்க. இப்பத்தான் புரியுது."
" இப்ப நீ சொன்ன ஒவ்வொன்னுக்கும் நான் விளக்கம் சொல்றேன். கேள்."
" சரிங்க"
" தமிழ் நாட்டில பெரும்பாண்மையான மக்களுக்கு தெரிந்த மொழி தமிழ். அதுதான் ஆட்சி மொழியக இருக்கவேண்டும். இதில் என்ன சாதனை இருக்கு? இது மூலமா எப்படி தமிழ் வளர்ந்தது?"
" ஆமாம்!"
" கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது, பேரூந்துகளில் திருக்குறளை எழுதுவது, தமிழ் அறிஞர்களின் ஆக்கங்களை அரசுடமையாக்குவது எல்லாம் பிரயோஜன மற்ற வேலை. அவ்ற்றை எல்லாம் படித்து நீங்கள் வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டும். அதை செய்யவில்லை. ஆனால், தமிழ் வள்ரும் என சொல்லுவது வேடிக்கையாக இருக்கு!"
" ம் "
எனக்கு சிலை வையுங்கள் என்று நான் உங்களிடம் கேட்டேனா?. இல்லையே. அப்படியிருக்க உங்களை யார் வைக்க சொன்னது?. எனக்கு சிலை வைப்பதால் எப்படி தமிழ் வளரும்? என்னை பெருமைப்படுத்துவதுக்கு என்றால், அது நான் எழுதிய குறள் தானே காரணம்? அதை எழுதியதின் நோக்கமே "ஆண்டியிலிருந்து அரசன் வரை அனைவரும் நல்லறத்தை கடைப்பிடிக்க வேண்டும்" என்பதுதான்.
அவற்றை தூக்கியெறிந்துவிட்டு மாக்களாக வாழும் உங்களுக்கு என்னை சிறப்பிக்கும் தகுதியே கிடையாது.
" ஆமாங்க".
" மொழி என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளாமலே, மொழியை வளர்க்க போறேன் என்று இனி நீங்கயாரும் சொல்லக்கூடாது என்பதற்கு, மொழியை பற்றி விளக்கம் தரட்டுமா?
" நானே உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். சொல்லுங்க".
"மனிதன் ஆதிகாலத்தில் மனிதன் விலங்குகளோடு விலங்காக வாழ்ந்துவந்தான். அவனுடைய ஆறாவது அறிவு வளரத்தொடங்கிய பின்தான் மனிதனாக மாறத் தொடங்கினான். அதுவரை ஒலிகளை எழுப்பி ஒருவருக்கொருவர் செய்து வந்த தொடர்பு அவர்களுக்கு போதுமானதாக இல்லாததால் அதை மேம்படுத்த தொடங் கினர். அதன் பின் கூட்டங்கள் பல சேர்ந்து ஒரு குழுவாக உருவானது. பின் நாடு என்ற அளவிற்கு பல குழுக்கள் ஒன்று சேர்ந்தது. வளர்ச்சியினால் ஒலி தொடர்பு என்பது மொழியாக மாறத் தொடங்கியது. மனிதர்கள் உலகின் எல்லா பகுதிகளிலும் வாழ்ந்து வந்தார்கள். ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென்று மொழி களை உருவாக்கி கொண்டன. ஆரம்ப கட்டத்தில் பேச்சு மொழியாக இருந்தது பின் எழுத்து உருவம் பெற்றது. இதுதான் மொழி தோன்றிய கதை. மொழி என்பது மனிதன் பிறர் சொல்லுவதை புரிந்து கொள்ளவும், தான் நினைப்பதை மற்றவர்க ளுக்கு புரிய வைக்க் பயன்படும் கருவிதான். கருவி எப்படி வளர முடியும்?. அதில் மாற்றங்கள் தான் ஏற்படும்!. அதன் அடிப்படையில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படும் பொழுது பிற மொழி சொற்கள் சேர்ந்து கொள்ளும். இதுதான் சரி. உலக மொழி என்ற அந்தஸ்து பெற்றுள்ள ஆங்கிலத்தில் பிரெஞ்சு மொழி, ஜெர்மன் மொழி, லத்தீன் மொழி வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மனித வளர்ச்சி க்கு, முன்னேற்றத்திற்கு அறிவு வளர்ச்சி தான் முக்கியமே ஒழிய மொழி முக்கிய மில்லை. புரிந்ததா?"
மிக்க நன்றி அய்யா!. என்னுடைய அறியாமையை போக்கிய தங்களுக்கு எனது சார்பாகவும், வலையுலகின் சார்பாகவவும் நன்றி தெரிவித்துக்கொண்டு இத்துடன் பேட்டியை முடித்துக்கொள்கிறேன். நன்றி !.

மீண்டும் சந்திப்போம்.

6 comments:

வால்பையன் said...

வெங்காயத்தை உறிக்க உறிக்க உள்ள ஒன்னுமே இருக்காதே!

கோவி.கண்ணன் said...

உலக மொழி என்ற அந்தஸ்து பெற்றுள்ள ஆங்கிலத்தில் பிரெஞ்சு மொழி, ஜெர்மன் மொழி, லத்தீன் மொழி வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மனித வளர்ச்சி க்கு, முன்னேற்றத்திற்கு அறிவு வளர்ச்சி தான் முக்கியமே ஒழிய மொழி முக்கிய மில்லை. புரிந்ததா?"

SUMAZLA/சுமஜ்லா said...

நல்ல வேளை திருவள்ளுவரிடம் பேட்டி எடுத்ததால் தப்பித்தீர்கள். இல்லாவிட்டால்....

சுதந்திரன் said...

அருமை. வள்ளுவரின் குரலை மறந்துவிட்டு அவருக்கு சிலை வைப்பதால் மாட்டும் தமிழன் என்று காட்டிக்கொள்ளும் நாம் அனைவரும் வெட்கப்படவேண்டியர்களே.

துளசி கோபால் said...

super!!!!

உண்மைத்தமிழன் said...

சரிங்கண்ணே..

நீங்க சொன்னா கேட்டுக்க வேண்டியதுதான்..!