Monday, August 31, 2009

காமெடிசெய்யும் முதலமைச்சர்!.

விகடன்.காம் -லிருந்து இப்பொழுது ஒரு மெயில் வந்தது. அதவது நான் விகடன் .காம் - ல் ஸப்கிரைப் ( Subscribe) செய்திருக்கிறேன். புதிய செய்திகளை அவர்கள் பிரசுரிக்கும் பொழுது தனது ஸ்ப்கிரைப்பர்களுக்கு இ மெயில் மூலம் அது பற்றி தெரிவிப்பார்கள். மெயிலை திறந்து பார்த்தால், " இலவச திட்டங்கள் தொடரும்: முதலமைச்சர் கருணாநிதி அறிவிப்பு." என செய்தி இருந்தது.

சென்னை, ஆக.31-: அரசின் இலவச திட்டங்கள் தொடரும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- தி.மு.கழக அரசின் இலவசத் திட்டங்கள் மக்கள் நலத்திட்டங்கள் என்பதைத் தாண்டி வாக்கு வங்கி அரசியலுக்காக எல்லை தாண்டிப் போவதாக ஒரு ஆங்கில இதழ் கட்டுரை தீட்டியிருக்கிறதே?

பதில்:- ஒரு பொருள் பற்றி வாதம் செய்வோர் உண்டு. எதிர் வாதம் செய்வோரும் இருப்பர். இவர்களை அன்னியில் மூன்றாவது அணியினர் ஒருபுறம் இருப்பார்கள். அவர்கள் தான் "குதர்க்க வாதம்" செய்வோர். அப்படிப்பட்ட ஒருவர் தான் தமிழக அரசின் இலவசத் திட்டங்களைப் பற்றி குறை கூறி அந்தக் கட்டுரையைத் தீட்டியிருக்கிறார் என்று கருதுகிறேன்.

அந்தக் கட்டுரையாளர் தன் வாதத்திற்கு ஆதரவாக சீனப் பழமொழி ஒன்றைத் துணைக்கு அழைத்திருக்கிறார். "பசி என்று வருபவனுக்கு மீனைக் கொடுக்காதே; மீன் பிடிக்கக் கற்றுக் கொடு" என்று எழுதியிருக்கிறார்.

அதாவது ஒருவன் பசி உயிர் போகிறதே என்று அவரிடம் கேட்டால், உடனடியாக அவனுக்கு ஒரு ரொட்டித் துண்டு வாங்கிக் கொடுப்பதற்குப் பதிலாக அவன் பசியில்லாமல் வாழ பாடம் நடத்தி எப்படியெல்லாம் மீன் பிடிக்க வேண்டும் தெரியுமா என்றெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டுமாம். அவன் அதைக் கற்றுக்கொள்வதற்குள் அவன் உயிரே போய் விடும்.

அய்யன் வள்ளுவர்; திருக்குறளில் "காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" அதாவது தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

ஒருவருக்கு செய்கின்ற உதவி உரிய காலத்தில் செய்யப்பட வேண்டும். மாறாக உன்னை நீயாகவே சம்பாதிக்க வைக்கிறேன், நீ இலவசமாக எதையும் பெறக் கூடாது என்றெல்லாம் கூறினால், அவன் அதற்குத் தயாராவதற்குள் போய்ச் சேர்ந்து விடுவான்.

இலவசத் திட்டங்களுக்காக செலவிடப்படும் தொகைகளையெல்லாம் குறிப்பிட்டு ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்திற்காக 150 கோடி- கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறு கால உதவி 250 கோடி என்றெல்லாம் கட்டுரை ஆசிரியர் பட்டியல் இட்டுள்ளார்.

இத்தகைய உதவிகளைப் பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளவர்கள் இருக்கும் வரை இத்தகைய உதவிகளைச் செய்து தான் ஆக வேண்டும். ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் முன்னேற்றம் அடைய செய்து விட்டோ மென்றால், அதன் பிறகு இலவசத் திட்டங்களை நிறுத்தி விடலாம்.

ஆனால் மக்கள் அந்த அளவிற்கு வாழ்க்கையிலே முன்னேறுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அதுவரை இத்தகைய உதவிகள் அளிக்கப்பட்டாக வேண்டுமென்பதுதான் கழக அரசின் குறிக்கோள். கட்டுரை ஆசிரியர் தமிழக அரசின் ஒட்டுமொத்த பற்றாக்குறை பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாகவும், அப்படியிருக்கும் போது இலவசத் திட்டங்கள் தேவை தானா என்றும் வருத்தப்படுகிறார்.

இலவசத் திட்டங்களை வழங்காத மாநில அரசுகளில் பற்றாக்குறையே கிடையாதா? அப்படி எந்த மாநிலம் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது? அது மாத்திரமல்ல. தமிழக அரசு தனது மொத்த பட்ஜெட்டையும் இலவசத் திட்டங்களுக்குச் செலவு செய்யவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காகவும், மக்கள் வாழ்க்கையிலே முன்னேற வேண்டும் என்பதற்காகவும் எத்தனையோ கோடிகள் நிதி ஒதுக்கியிருப்பதையெல்லாம் மறந்து விடக்கூடாது.

உதாரணமாக 2009-2010 ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வேளாண்மைத் துறை, கால் நடைத் துறை, பால்வளத் துறை, மீன்வளத் துறை, கூட்டுறவுத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை போன்ற துறைகளில் விவசாய வளர்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள மொத்த நிதி ஒதுக்கீடு மட்டும் 5,236 கோடி ரூபாயாகும். 2005-2006ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் காவல் துறைக்காகச் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 1,346 கோடி ரூபாய்.

அதனை இந்த ஆண்டு 2,855 கோடி ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம் என்றால், அந்தத் தொகை இலவசத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையா என்பதை கட்டுரை ஆசிரியர் தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.

நீர் வள நில வளத்திட்டத்திற்காக 533 கோடி ரூபாயும், நீதித்துறைக்காக 378 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்காக மட்டும் 9,147 கோடி ரூபாயும் உயர் கல்வித் துறைக்காக 1,463 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றால் அதெல்லாம் இலவசத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி என்று அந்த இதழில் கட்டுரை எழுதியிருப்பவர் எண்ணுகிறாரா?

எனவே இந்த அரசைப் பொறுத்தவரையில் ஏழைகள் ஓரளவிற்கு சமுதாய அந்தஸ்து பெறுகின்ற வரையில் இலவசத் திட்டங்கள் என்பது இன்றியமையாதது என்பது அனுபவ பூர்வமான உண்மையாகும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

நமக்கு இதை படித்தவுடன் தோன்றும் சில சந்தேகங்கள்!. யார் பதிலளிப்பார்கள்?

அரசாங்கம் என்பது தனிநபர் அல்லது தனியார் நிறுவனம் இல்லை. தமிழ் நாட்டு மக்களால், தங்களுடைய பொதுவான அடிப்படை தேவைகளை செய்ய அமைக்கப்பட்ட அமைப்பு. அது முற்றிலும் மக்களால் கொடுக்கப் படும்பணத்தை கொண்டு இயங்குவது. பச்சையாக சொல்வதாக இருந்தால், ஒரு வேலைக்கார அமைப்பு!. ஒரு வேலைக்காரன், தன்னுடைய எஜமானர்களுக்கு அவர்கள் பணத்தில் செய்வதை எப்படி இலவசம் என்று சொல்ல முடியும் ?. முதலமைச்சர் தனது அல்லது தன் அமைச்சர்கள் அல்லது தனது கட்சியிலிருந்து, இத்திட்டங்களுக்கு ஆகும் செலவு செய்யப்படுமானால், இதை " இலவச திட்டம் " என கூற முடியும். எனவே இது வெறும் திட்டம் மட்டுமே!. இலவச திட்டம் கிடையாது.

2. வாக்கு வங்கி அரசியலுக்காக செய்யப்படுகிறது என்பதை மறுத்துள்ளார். அவர் வைக்கும் வாதம் காமெடியாக இருக்கிறது. இதற்கு வள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டியுள்ளது கொடுமை!. "காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" - இதற்கு நமக்கு தெரிந்த பொருள் " ஒருவன் இக்கட்டான நிலையில் இருக்கும் பொழுது அவனுக்கு உதவுவதுதான் சிறந்தது". டி.வி பார்ப்பது எனபது ஒருவனின் அத்தியாவசிய தேவையா? அல்லது இது இக்கட்டான சூழ்நிலையா? எதுவுமே இல்லாமல் நடுத்தெருவில் பிச்சை எடுக்கும் லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இருக்கும் இடமும் , உண்ன உணவும் கொடுத்து அத்துடன் அவன் பிழைப்புக்கும் வழி செய்தால் அது உதவி திட்டம். கீழ் மட்டத்தில் இருக்கும் இவர்களை கண்டு கொள்ளவே இல்லையே? இருக்க இடம், மின்சார வசதி, கேபிள் கனெக்ஷன் உள்ளவனிடம் ஏன் இந்த பரிவு? பிச்சைக்காரனுக்கு வோட்டு கிடையாது ! ஆனால் இவனுக்கு உண்டு. இதை ஓட்டு வங்கி திட்டம் என்று சொல்வதில் என்ன தவறு? குடிகாரனுக்கு இலவச் மதுத்திட்டம், இலவச சின்ன வீடு திட்டம் போன்றவற்றையும் " காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" எனக்கூறி அமுல் படுத்த போகிறாரா? பசியென்று வருபவனுக்கு முதலில் மீனைக்கொடு. அடுத்தநாள் மீன் பிடிக்க கற்றுக்கொடு! (சீன பழமொழி) அர்த்தம்: அவலத்தில் உள்ள ஒருவனுக்கு அதில் இருந்து மீள வழி சொல்லு. பிறரில் என்றும் தங்கி இருக்க வைத்து அவன் நிலையை நீயும் மேலும் அவலம் ஆக்காதே! . இதை புரிந்து கொண்டும் விதண்டா வாதத்திற்காக, "உடனடியாக அவனுக்கு ஒரு ரொட்டித் துண்டு வாங்கிக் கொடுப்பதற்குப் பதிலாக அவன் பசியில்லாமல் வாழ பாடம் நடத்தி எப்படியெல்லாம் மீன் பிடிக்க வேண்டும் தெரியுமா என்றெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டுமாம்" என கூறுகிறார்.

சரி. இன்று பிச்சைகாரர்கள் போல கையேந்தி நிற்கும் இவர்கள் நிலை மாற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.

கட்டுரை எழுதுபவர்கள் இந்த நாட்டு மக்களில் ஒருவர் என்பதையும் அதை வெளியிடும் பத்திரிகைகள் ஜனநாயகத்தின் ஒரு தூண் என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை முறையாக சொல்ல வேண்டிய கடமை பதவியிலிருப்பவர்களுக்கு உண்டு. காரணம் இப்பதவி மக்கள் வழங்கியது. பதவியிலிருந்து பெறும் வசதிகள் மக்கள் பணத்திலிருந்து கொடுக்கப்படு கிறது!.

Thursday, August 20, 2009

உண்மைத் தமிழனுக்கு ஒரு கடிதம் !

அன்பு தம்பி உண்மை தமிழனுக்கு,
தங்களுடைய " மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை இவர்களுக்கு மட்டும் இல்லையா ..... " எனற தலைப்பிட்ட பதிவிற்கான http://truetamilans.blogspot.com/ எனது விளக்கம் பதிவாக தரப்படுகிறது. தங்கள் பிளாக்கிலேயே பின்னூட்டம் இடலாம் என்று நினைத்தேன். பின்னூட்டம், பதிவு அளவிற்கு இருப்பதால் பதிவாகவே போட்டுள்ளேன்.

தங்களின் தலைப்பு, அரசியல்வாதிகளைத் தவிர மற்றவர்களுக்கு சூடு ....... இத்தியாதி இருப்பது போல, பொருள் தருகிறது. இந்த விஷயத்தில் அரசியல் வாதிகள் ( மன்னிக்கவும் - என்னால் மக்கள் பிரதிநிகள் என்று இவர்களை சொல்ல முடியவில்லை) மற்றும் வாக்காள அறிவு கொழுந்துகளுமாகிய நாமும் தான் சம்பந்தப்பட்டவர்கள். அப்படியென்றால் நமக்கெல்லாம் சூடு, சொரணை எல்லாம் இருக்குதுன்னு சொல்லுறீங்களா?

ஆமாம் என்றால் இதுதான் உலகிலேயே முதன்மையான ஜோக் ஆக இருக்க முடியும் !

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1967 ல் மாற்று அரசு அமையும் வரை, தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. ஒப்பிட்டு பார்த்து எது நல்ல கட்சி, எது நல்லது செய்யும் என முடிவு செய்ய முடியாததால், ஒரு மாற்றாக திராவிட கழகத்தினருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தோம். என்ன நடந்தது? 1947 லிருந்து 1967 வரை ஏறு முகமாக இருந்த தமிழ்நாட்டின் வளர்ச்சி, படிப்படியாக இறங்கு முகமானது.

அதன் பின்பாவது நீங்கள் சொல்லும் " சூடு, சொரணை நமக்கிருந்திருந்தால், மாற்று கட்சியினரை ஆட்சி செய்ய வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். நமக்கு ஏழரை நாட்டு சனியன் பிடித்ததால், அறிவு வேலை செய்யவில்லை. அதனால் சேவை செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணங்களுடன் அரசியலில் இருந்தவர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள். புதிதாக நல்லவர்கள் யாரும் அரசியலுக்கு வர விரும்பவில்லை!.

அதன் விளைவு, அரசியல் வியாபாரமானது. வியாபாரம் என்று வந்துவிட்ட பின்பு பனம் இருப்பவன் எவன் வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம் இல்லையா?. நல்லவர்களை தவிர எல்லோரும் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். ஜாதிக்கட்சிகள், மத கட்சிகள் என்று ஏராளமான கட்சிகள் தோன்றி விட்டது. அரசியல் சாக்கடையாக ஆகி விட்டது!

அய்யோ ! சாக்கடை நாறுகிறதே. சாக்கடை நாறலாமா? என்று ஆதங்கப்படுகி றீர்கள்!. சாக்கடை நாறாமல் மணக்கவா செய்யும்?

ஒரு பிரபல் கட்சியை சார்ந்தவர், மந்திரியாக இருக்கும் பொழுது பத்தாயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது என்று ஊடகங்கள் எல்லாம் கிழி கிழி என்று கிழித்தன. அது உண்மைதான் என C.A.G என அழைக்கப்படும் " Comptroller & Auditor General of India" -வே உறுதி செய்த பின்பும், அவரை மறுபடியும் நாம் தேர்ந்தெடுத்து, அதே துறையில் அமைச்சராக்கியுள்ளோம்! இந்த தவறுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்!

சக்கடை நாறத்தான் செய்யும் அதை மாற்றாத வ்ரை. எப்படி மாற்றுவது என்று விவாதிப்போம். ஒன்றுபட்டு செயல் படுவோம்.

" மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை நமக்கு இல்லையா ..... " என்று பதிவின் தலைப்பு இருக்குமானால் பொறுத்தமாக இருக்கும்.
இந்த பதிவுக்கு காரணமாயிருந்த தங்களுக்கு நன்றி!

அன்புடன்
உண்மையான உண்மை.
http://invisibleman.blogspot.com/

Tuesday, August 18, 2009

கொலையின் பெயர் என்கவுண்டர் !













இதன் பெயர் தான் என்கவுண்டர்!

மணிப்பூர் மாநிலத்தின் தலை நகராகிய இம்பாலில், ஜூலை 23 ம் தேதி, ஜனத்திரள் அதிகமாக உள்ள இடத்தில் பார்மஸிக்கு வந்த 27 வயதான இந்திய பிரஜையான Chongkham Sanjit என்பவரை பார்மசிக்குள் வலுக்கட்டாயமாக த்ள்ளிட்டு போய் சுட்டு கொன்றுள்ளனர் MPC என அழைக்கப்படும் மணிப்பூர் ரேபிட் போர்ஸ் போலீஸ். இன்னொரு கர்ப்பினி பெண்ணும் இவர்களால் கொல்லப்பட்டு அவள் உடலும் வேனில் ஏற்றப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். அதிர்ஷ்டவசமாக போலீஸுக்கு தெரியாமல் அங்கிருந்த ஒருவர் மொபைல் போன் காமிராவில் படம் எடுத்து விட்டார். இப்புகைப்படங்கள் பின் டெகல்கா பத்திரிகை மூலம் வெளியடப்பட்டு விஷயம் அம்பலத்துக்கு வந்துள்ளது. வாழ்க இந்திய ஜனநாயகம்!

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் !

தொழில் தொடங்குகள் !

* முதலீடு எதுவும் தேவை இல்லை!

* கல்வி தகுதி / அனுபவம் தேவையில்லை!

* நீங்க்ள் 21வயது பூர்த்தியடைந்தவராக இருந்தால் போதும்!

* இந்த தொழிலை நீங்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ செய்யலாம் !

* நீங்கள் வருமான வரி கணக்கு காட்ட வேண்டாம்!

* தொழில் வரி கிடையாது!

* உங்கள் தகுதியின் அடிப்படையில், மாநில அரசு அல்லது மத்திய அரசே உங்களுக்கு உதவித்தொகை வழங்குவதுடன் பல வசதிகளும் செய்து தரும்!

3 மாத கால இலவச பயிற்சி !

அணுக வேண்டிய முகவரி :

திரு. அப்பாவி தமிழன்
( தலைவர்)
தமிழ் நாடு வாக்காளர்கள் பின்னேற்ற சங்கம்.
252/ ADEF -32, நார்த் உஸ்மான் ரோடு,
தி. நகர், சென்னை.
P.H 9999 8888/ 89/90

கவனிக்க: எங்களுக்கு சென்னையை தவிர வேற் எங்கும் கிளைகள் இல்லை



நான் என்ன ஜாதி ? சொல்லுங்கள்.

நான் ஒரு அநாதை!

என் அப்பா அம்மா யார் ? என்று எனக்கு தெரியாது.

ஒரு வயதில் அனாதையாக ரோட்டில் கிடந்த என்னை எடுத்து வளாத்தது ஒரு தேவர்!

அதனால் என் அப்பா அம்மா என்ன ஜாதி என்றும் எனக்கு தெரியாது.

இப்பொழுது சொல்லுங்கள் நான் எந்த ஜாதி !

நீங்கள் தான் விஞ்ஞானத்தில் முன்னேறியவர்களாச்சே !

சொல்லுங்கள் நான் எந்த ஜாதி ?

என்ன தயககம் !.

செல்லம்மா என்ற பெண்ணை காணவில்லை.

அடையாளம் காணமுடியாத நிலையில் அழுகிய ஒரு சடலம் ஆற்ரங்கறையில்!.

அது ஆணா, பெண்ணா ? அது செல்லம்மாவின் உடல் தானா என்பதை டி.என்.எ டெஸ்ட் மூலம் கண்டு பிடித்து விடும் அளவிற்கு நீங்கள் திறமைசாலிகள் !.

உயிரோடு இருக்கும் நான், என்ன ஜாதி என்பதை கண்டு பிடிப்பதா உங்களுக்கு பெரிய விஷயம் ?.

கண்டுபிடித்து சொல்லுங்கள் நான் எந்த ஜாதிக்காரன் என்று !.

Saturday, August 15, 2009

திருவள்ளுவருடன் ஒரு சிறப்பு பேட்டி.

"சுதந்திர தினத்தை முன்னிட்டு எங்கள் வலைப்பூவிற்கு பேட்டியளிக்க முன்வந்த தங்களுக்கு, எங்களது வலைப்பூ மற்றும் வலையுலகின் சார்பாக நன்றியை தெரி வித்துக்கொண்டு பேட்டியை துவங்குகிறேன்". ---( நமது நிருபர்).
" தமிழ் மொழியை வளர்ப்பது எப்படி?"
" அது என்ன ஆடா? அல்லது மாடா? நாம் தீனி போட்டு வளர்ப்பதற்கு!"
" சரி. அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழிதான் சிறந்தது. உங்கள் கருத்து என்ன?"
" உனக்கு எத்தனை மொழி தெரியும்?"
" தமிழும் ஆங்கிலமும்"
" அப்படியா? உனக்கு, உன் மனதில் நினைப்பதை ஆங்கிலத்தில், ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவன் புரியும் வகையில் பேச, எழுத தெரியுமா?"
" ஏதோ சுமாரா, குத்துமதிப்பா தெரியும்."
" அப்படின்னா முழுசாஆங்கிலம் தெரியாது!"
" ஆமாம்"
" தமிழ் மட்டும் தெரிந்த உனக்கு, தமிழ் மொழிதான் சிறந்தது என்று சொல்ல என்ன யோக்கிதை இருக்கு?
" ............................. தமிழ் வளச்சிக்காக நாங்கள் பாடுபடுவதைப் பற்றி என்ன நினைக் கிறீர்கள்?"
" மறுபடியும் முதல் கேள்விக்கே வந்திருக்கிறாய்!. சரி. என்ன பாடுபட்டீர்கள்? சொல் "
" தமிழை மாநிலத்தின் ஆட்சி மொழியாக்கியுள்ளோம். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய சட்டம் கொண்டு வந்துள்ளோம். அரசாங்க பேரூந்துகளில் திரு க்குறளை எழுதியுள்ளோம். தமிழ் அறிஞர்களின் புத்தகங்களை நாட்டுடமையாக் கியுள்ளோம். கல்வி நிலையங்களில், தமிழ் வழி கல்வியை கொண்டு வந்துள் ளோம். உங்களுக்கு பல இடங்களிலும் சிலை வைத்துள்ளோம். சமீபத்தில் 18 வருடமாக பெங்களூரில் திறக்கப்படாமலிருந்த உங்கள் சிலையை சமீபத்தில் திறந்துள்ளோம். இவையெல்லாம் எங்கள் சாதனைகள்."
" உன் பட்டியல் பெரிசாகத்தான் இருக்கிறது. இதனால் எப்படி தமிழ் வளரும் அல்லது வளர்ந்தது என்பதை சொல்ல முடியுமா?".
" எல்லோரும் சொல்கிறார்கள. அதனால்தா...........ன்?"
" நீ குறள் படித்திருக்கிறாயா?"
" நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது திருக்குறள் போட்டிகளில் கலந்து நிறைய பரிசுகள் பெற்றிருக்கிறேன்."
" நல்லது. எப்பொருள் என்று துவங்கும் குறளை சொல்லி அதன் விளக்கத்தையும் சொல்."
" எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. அதாவது எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையை காண்பதுதான் அறிவான் செயல்."
" என்னுடைய குறள் உலக மக்கள் அனைவருக்கும், எக்காலத்திலும் பொருந்தக் கூடிய நல் வழி காட்டும் கருத்துக்களை சொல்லும் நூல். அதைப்படித்திருக்கும் நீ எப்படி மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதை அப்படியே ஏற்றுக்கொண்டாய்?"
" தவறுதாங்க. இப்பத்தான் புரியுது."
" இப்ப நீ சொன்ன ஒவ்வொன்னுக்கும் நான் விளக்கம் சொல்றேன். கேள்."
" சரிங்க"
" தமிழ் நாட்டில பெரும்பாண்மையான மக்களுக்கு தெரிந்த மொழி தமிழ். அதுதான் ஆட்சி மொழியக இருக்கவேண்டும். இதில் என்ன சாதனை இருக்கு? இது மூலமா எப்படி தமிழ் வளர்ந்தது?"
" ஆமாம்!"
" கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது, பேரூந்துகளில் திருக்குறளை எழுதுவது, தமிழ் அறிஞர்களின் ஆக்கங்களை அரசுடமையாக்குவது எல்லாம் பிரயோஜன மற்ற வேலை. அவ்ற்றை எல்லாம் படித்து நீங்கள் வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டும். அதை செய்யவில்லை. ஆனால், தமிழ் வள்ரும் என சொல்லுவது வேடிக்கையாக இருக்கு!"
" ம் "
எனக்கு சிலை வையுங்கள் என்று நான் உங்களிடம் கேட்டேனா?. இல்லையே. அப்படியிருக்க உங்களை யார் வைக்க சொன்னது?. எனக்கு சிலை வைப்பதால் எப்படி தமிழ் வளரும்? என்னை பெருமைப்படுத்துவதுக்கு என்றால், அது நான் எழுதிய குறள் தானே காரணம்? அதை எழுதியதின் நோக்கமே "ஆண்டியிலிருந்து அரசன் வரை அனைவரும் நல்லறத்தை கடைப்பிடிக்க வேண்டும்" என்பதுதான்.
அவற்றை தூக்கியெறிந்துவிட்டு மாக்களாக வாழும் உங்களுக்கு என்னை சிறப்பிக்கும் தகுதியே கிடையாது.
" ஆமாங்க".
" மொழி என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளாமலே, மொழியை வளர்க்க போறேன் என்று இனி நீங்கயாரும் சொல்லக்கூடாது என்பதற்கு, மொழியை பற்றி விளக்கம் தரட்டுமா?
" நானே உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். சொல்லுங்க".
"மனிதன் ஆதிகாலத்தில் மனிதன் விலங்குகளோடு விலங்காக வாழ்ந்துவந்தான். அவனுடைய ஆறாவது அறிவு வளரத்தொடங்கிய பின்தான் மனிதனாக மாறத் தொடங்கினான். அதுவரை ஒலிகளை எழுப்பி ஒருவருக்கொருவர் செய்து வந்த தொடர்பு அவர்களுக்கு போதுமானதாக இல்லாததால் அதை மேம்படுத்த தொடங் கினர். அதன் பின் கூட்டங்கள் பல சேர்ந்து ஒரு குழுவாக உருவானது. பின் நாடு என்ற அளவிற்கு பல குழுக்கள் ஒன்று சேர்ந்தது. வளர்ச்சியினால் ஒலி தொடர்பு என்பது மொழியாக மாறத் தொடங்கியது. மனிதர்கள் உலகின் எல்லா பகுதிகளிலும் வாழ்ந்து வந்தார்கள். ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென்று மொழி களை உருவாக்கி கொண்டன. ஆரம்ப கட்டத்தில் பேச்சு மொழியாக இருந்தது பின் எழுத்து உருவம் பெற்றது. இதுதான் மொழி தோன்றிய கதை. மொழி என்பது மனிதன் பிறர் சொல்லுவதை புரிந்து கொள்ளவும், தான் நினைப்பதை மற்றவர்க ளுக்கு புரிய வைக்க் பயன்படும் கருவிதான். கருவி எப்படி வளர முடியும்?. அதில் மாற்றங்கள் தான் ஏற்படும்!. அதன் அடிப்படையில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படும் பொழுது பிற மொழி சொற்கள் சேர்ந்து கொள்ளும். இதுதான் சரி. உலக மொழி என்ற அந்தஸ்து பெற்றுள்ள ஆங்கிலத்தில் பிரெஞ்சு மொழி, ஜெர்மன் மொழி, லத்தீன் மொழி வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மனித வளர்ச்சி க்கு, முன்னேற்றத்திற்கு அறிவு வளர்ச்சி தான் முக்கியமே ஒழிய மொழி முக்கிய மில்லை. புரிந்ததா?"
மிக்க நன்றி அய்யா!. என்னுடைய அறியாமையை போக்கிய தங்களுக்கு எனது சார்பாகவும், வலையுலகின் சார்பாகவவும் நன்றி தெரிவித்துக்கொண்டு இத்துடன் பேட்டியை முடித்துக்கொள்கிறேன். நன்றி !.

மீண்டும் சந்திப்போம்.