நான் ஒரு அநாதை!
என் அப்பா அம்மா யார் ? என்று எனக்கு தெரியாது.
ஒரு வயதில் அனாதையாக ரோட்டில் கிடந்த என்னை எடுத்து வளாத்தது ஒரு தேவர்!
அதனால் என் அப்பா அம்மா என்ன ஜாதி என்றும் எனக்கு தெரியாது.
இப்பொழுது சொல்லுங்கள் நான் எந்த ஜாதி !
நீங்கள் தான் விஞ்ஞானத்தில் முன்னேறியவர்களாச்சே !
சொல்லுங்கள் நான் எந்த ஜாதி ?
என்ன தயககம் !.
செல்லம்மா என்ற பெண்ணை காணவில்லை.
அடையாளம் காணமுடியாத நிலையில் அழுகிய ஒரு சடலம் ஆற்ரங்கறையில்!.
அது ஆணா, பெண்ணா ? அது செல்லம்மாவின் உடல் தானா என்பதை டி.என்.எ டெஸ்ட் மூலம் கண்டு பிடித்து விடும் அளவிற்கு நீங்கள் திறமைசாலிகள் !.
உயிரோடு இருக்கும் நான், என்ன ஜாதி என்பதை கண்டு பிடிப்பதா உங்களுக்கு பெரிய விஷயம் ?.
கண்டுபிடித்து சொல்லுங்கள் நான் எந்த ஜாதிக்காரன் என்று !.
Tuesday, August 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
புதுமைப்பித்தன்ன்னு ஒரு படம்,
பார்த்தீபன் நடிச்சது, அதுல ஒரு வசனம் வரும் பாருங்க, சும்மா அனல் பறக்கும்!
நீங்க என்ன சாதின்னா கேட்டிங்க!
நான் மனித சாதி!
அப்போ நீங்க!?
Post a Comment