Tuesday, September 15, 2009

ஒரு கடிதம்.

மத்திய சட்ட அமைச்சர் திரு. வீரப்ப மொய்லி அவர்களுக்கு வணக்கம்.

2011 -ம் ஆண்டு எடுக்கவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதி வாரி யாக நடத்தவேண்டும் என சோனியா காந்தியின் பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களுக்கு நீங்கள் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வந்து ள்ளது.

எததனை மணிக்கு குளிக்கவேண்டும், எப்பொழுது தலைப்பாகை கட்ட வேண்டும் என்ற விஷயத்திலிருந்து, பாராளுமன்றத்தில என்ன பேசவேண்டும் என்பது வரை தங்களுடைய தலைவி திருமதி சோனியாவை கேட்டு, அவர் சொல்படி செயல் படும் மன்மோகன் சிங் அவர்கள், உங்கள் கடிதத்தையும் அவரிடம் தான் கொண்டு போவார். அவருக்கு இந்த சிரமத்தை கொடுக்காமல் நீங்களே தலைவிக்கு அனுப் பியிருந்தால் அது சிக்கன நடவடிக்கையாக இருந்திருக்கும் ! சிக்கன நடவடிக்கை என்பது பிரச்சனையிலிருந்து மக்களை திசை திருப்பும் ஒரு ஸ்டண்ட் தானே ! விட்டு தள்ளுங்கள்.

கர்நாடகாவில் நீங்கள் முதல் மந்திரியாக இருந்த பொழுது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லீம்கள் பற்றிய கணக்கெடுப்பு எடுத்து, அவர்களுக்கான நலத்திட்டங்களை கொடுத்ததாக கூறியுள்ளீர்கள். அங்கு ஒன்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லீம்கள் ஓகோ என்று பசி பட்டினியின்றி செழிப்பாக இல்லையே? ஒருவேளை அரசியல்வாதிகளாக இருப்பவர்களுக்கான திட்டத்தை தவறாக பொதுமக்களுக்கு என நினைத்துவிட்டேனா? ஒன்றும் புரியவில்லை.

சரி. இப்படி ஒரு கணக்கெடுத்து என்னத்தை சாதிக்கமுடியும் என நினைக்கிறீர் கள்? சலுகைகளை அறிவிக்கலாம்! நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் போல. அதை அமுல்படுத்தப்போவது மாநில அரசுகள் தான். வழ்க்கம் போல, சேர வேண் டியவர்களுக்கு கிடைக்க போவதில்லை. அந்த பிரிவில் மிகவும் வசதியாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் போன்ஸ் ஆக இது கிடைக்கப்போகிறது.

இந்த சலுகைகள் மூலம் மற்றவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டு கொஞச நஞசம் ஒட்டிக்கொண்டிருக்கும் ஜாதி மத நல்லுறவுகள் அறுந்து போகும். அதைப்பற்றி நாம் ஏன் கவைப்படவேண்டும்?

"ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" நாட்டில் ஜாதி கலவரங்கள், மத கலவரங்கள் என ஆளாளுக்கு அடித்துக்கொண்டால்தானே நமக்கு நல்லது.
அவர்கள் கவனம் முழுவதும் அதிலிருக்கும் பொழுது, நாம் எப்படி ஆட்சி செய்கிறோம் என்பதை பற்றி தெரிந்து கொள்ள நேரம் இருக்காது! அதனால் தானே எல்ல அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக " சலுகை" என்ற புலிவாலை பிடித்திருக்கிறீர்கள்.

எப்படியோ, நல்லாயிருங்கள். காந்தி, நேரு, லால்பகதுர் சாஸ்திரி, காமராஜர், கக்கன் போன்ற, நாட்டின் நலனுக்காக பாடுபட்ட தன்னலமற்ற தேசிய தலைவர்கள் இப்பொழுது யாரும் இல்லை. அவர்களின் காங்கிரஸ் கட்சியும் இன்று இல்லை.

தேர்தல் முறை கேடுகள் காரணமாக தனது தேர்தல் வெற்றி செல்லாது என,1975 -ம் ஆண்டு ஜூன் மாதம் 12 ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க மறுத்து, ஜனநாயகததை குழிதோண்டி புதைத்து, " அவசர கால நிலையை பிரகடனம் செய்தார் திருமதி இந்திரா காந்தி. இதை எதிர்த்த தேசிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சர்வாதிகார போக்கால் காங்கிரசை பிளவு படுத்தி இந்திரா காங்கிரஸை உருவாக்கினார். காலப்போக்கில் இந்திரா காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரஸ் என பெயர் மாற்றம் அடைந்தாலும் அது உண்மையான காங்கிரஸ் இல்லை. சுய லாபத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சியிடம் தேசிய நலன் பற்றி பேசுவதில் எவ்வித பலனும் இல்லை.

தேசிய நலனில் அக்கறை கொண்டு, ஊழலற்ற ஆட்சியை தரக்கூடிய கட்சி எதுவுமே இல்லாததால்தான் 50 சதவிகிதத்தினர் தேர்தலில் வாக்களிப்பதே இல்லை. இதுதான் உண்மை. என்றைக்கு இவர்களுக்கு ஒரு வேகம் வருகிறதோ அன்று தான் இந்தியாவில் உண்மையான ஜனநாயகத்தை பாக்க முடியும். அது வரை " எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம்" என்ற பழமொழிக்கேற்ப நாட்டை குட்டிச்சுவராக்கட்டும் ! வாழ்க இந்திய இன்றைய ஜனநாயகம் ! பாவம் மகாத்மா காந்தி!



1 comment:

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.