Tuesday, September 15, 2009

ஒரு கடிதம்.

மத்திய சட்ட அமைச்சர் திரு. வீரப்ப மொய்லி அவர்களுக்கு வணக்கம்.

2011 -ம் ஆண்டு எடுக்கவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதி வாரி யாக நடத்தவேண்டும் என சோனியா காந்தியின் பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களுக்கு நீங்கள் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வந்து ள்ளது.

எததனை மணிக்கு குளிக்கவேண்டும், எப்பொழுது தலைப்பாகை கட்ட வேண்டும் என்ற விஷயத்திலிருந்து, பாராளுமன்றத்தில என்ன பேசவேண்டும் என்பது வரை தங்களுடைய தலைவி திருமதி சோனியாவை கேட்டு, அவர் சொல்படி செயல் படும் மன்மோகன் சிங் அவர்கள், உங்கள் கடிதத்தையும் அவரிடம் தான் கொண்டு போவார். அவருக்கு இந்த சிரமத்தை கொடுக்காமல் நீங்களே தலைவிக்கு அனுப் பியிருந்தால் அது சிக்கன நடவடிக்கையாக இருந்திருக்கும் ! சிக்கன நடவடிக்கை என்பது பிரச்சனையிலிருந்து மக்களை திசை திருப்பும் ஒரு ஸ்டண்ட் தானே ! விட்டு தள்ளுங்கள்.

கர்நாடகாவில் நீங்கள் முதல் மந்திரியாக இருந்த பொழுது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லீம்கள் பற்றிய கணக்கெடுப்பு எடுத்து, அவர்களுக்கான நலத்திட்டங்களை கொடுத்ததாக கூறியுள்ளீர்கள். அங்கு ஒன்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லீம்கள் ஓகோ என்று பசி பட்டினியின்றி செழிப்பாக இல்லையே? ஒருவேளை அரசியல்வாதிகளாக இருப்பவர்களுக்கான திட்டத்தை தவறாக பொதுமக்களுக்கு என நினைத்துவிட்டேனா? ஒன்றும் புரியவில்லை.

சரி. இப்படி ஒரு கணக்கெடுத்து என்னத்தை சாதிக்கமுடியும் என நினைக்கிறீர் கள்? சலுகைகளை அறிவிக்கலாம்! நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் போல. அதை அமுல்படுத்தப்போவது மாநில அரசுகள் தான். வழ்க்கம் போல, சேர வேண் டியவர்களுக்கு கிடைக்க போவதில்லை. அந்த பிரிவில் மிகவும் வசதியாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் போன்ஸ் ஆக இது கிடைக்கப்போகிறது.

இந்த சலுகைகள் மூலம் மற்றவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டு கொஞச நஞசம் ஒட்டிக்கொண்டிருக்கும் ஜாதி மத நல்லுறவுகள் அறுந்து போகும். அதைப்பற்றி நாம் ஏன் கவைப்படவேண்டும்?

"ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" நாட்டில் ஜாதி கலவரங்கள், மத கலவரங்கள் என ஆளாளுக்கு அடித்துக்கொண்டால்தானே நமக்கு நல்லது.
அவர்கள் கவனம் முழுவதும் அதிலிருக்கும் பொழுது, நாம் எப்படி ஆட்சி செய்கிறோம் என்பதை பற்றி தெரிந்து கொள்ள நேரம் இருக்காது! அதனால் தானே எல்ல அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக " சலுகை" என்ற புலிவாலை பிடித்திருக்கிறீர்கள்.

எப்படியோ, நல்லாயிருங்கள். காந்தி, நேரு, லால்பகதுர் சாஸ்திரி, காமராஜர், கக்கன் போன்ற, நாட்டின் நலனுக்காக பாடுபட்ட தன்னலமற்ற தேசிய தலைவர்கள் இப்பொழுது யாரும் இல்லை. அவர்களின் காங்கிரஸ் கட்சியும் இன்று இல்லை.

தேர்தல் முறை கேடுகள் காரணமாக தனது தேர்தல் வெற்றி செல்லாது என,1975 -ம் ஆண்டு ஜூன் மாதம் 12 ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க மறுத்து, ஜனநாயகததை குழிதோண்டி புதைத்து, " அவசர கால நிலையை பிரகடனம் செய்தார் திருமதி இந்திரா காந்தி. இதை எதிர்த்த தேசிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சர்வாதிகார போக்கால் காங்கிரசை பிளவு படுத்தி இந்திரா காங்கிரஸை உருவாக்கினார். காலப்போக்கில் இந்திரா காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரஸ் என பெயர் மாற்றம் அடைந்தாலும் அது உண்மையான காங்கிரஸ் இல்லை. சுய லாபத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சியிடம் தேசிய நலன் பற்றி பேசுவதில் எவ்வித பலனும் இல்லை.

தேசிய நலனில் அக்கறை கொண்டு, ஊழலற்ற ஆட்சியை தரக்கூடிய கட்சி எதுவுமே இல்லாததால்தான் 50 சதவிகிதத்தினர் தேர்தலில் வாக்களிப்பதே இல்லை. இதுதான் உண்மை. என்றைக்கு இவர்களுக்கு ஒரு வேகம் வருகிறதோ அன்று தான் இந்தியாவில் உண்மையான ஜனநாயகத்தை பாக்க முடியும். அது வரை " எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம்" என்ற பழமொழிக்கேற்ப நாட்டை குட்டிச்சுவராக்கட்டும் ! வாழ்க இந்திய இன்றைய ஜனநாயகம் ! பாவம் மகாத்மா காந்தி!



Wednesday, September 2, 2009

சமூக நீதி காவலர்கள் ஏன் தூங்குகிறார்கள்.

பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறங்குவதைத் தடுப்பது எப்படி? ஆராய உயர் நீதிமன்றம் உத்தரவு

First Published : 02 Sep 2009 02:28:52 AM IST


சென்னை, செப். 1: பாதாள சாக்கடையில் அடைப்புகளை அகற்ற மனிதர்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது எப்படி என்று ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாள சாக்கடைகளில் மனிதர் களை இறக்கி அடைப்புகளை அகற்றும் போது பல்வேறு சம்பவங்களில் உயிர் இழப்புகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து, அடைப்புகளை அகற்றுவதற்கு இயந்தி ரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மனிதர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குப் பிறகும், பாதாள சாக் கடைகளில் மனிதர்கள் தொடர்ந்து இறக்கப்படுவதாகக் கூறி நீதிமன்ற அவமதி ப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி எப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா, நீதிபதி பி.ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பாதாள சாக்கடைகள் குறித்து ஆராய, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநர் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். இந்தக் குழுவினர், பாதாள சாக்கடையில் திடக் கழிவுகள் கொட்டுவதைத் தடுப்பது மற்றும் அவற்றில் ஏற்படும் அடைப்பு களை அகற்றத் தேவையான கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக, பாதாள சாக்கடை களில் மனிதர்கள் இறங்குவதை எப்படி தடுப்பது என்பது குறித்து ஆராய்ந்து 2 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

நமது கேள்வி!


தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறும் அரசு ஏன் இது வரை இந்த விஷயத்தில் அக்கறை காட்டவில்லை? இந்த வேலையை செய்பவர்கள் உயர் ஜாதிக்காரர்கள் இல்லையே!

பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறங்கி வேலை செய்யும் பொழுது மூச்சு திணறி இறந்து விடும் நிகழ்ச்சிகள் நடப்பதால், மாற்று நடவடிக்கை கோரி ஏன் அரசியல் அல்லது தொழிலாளர் கட்சிகள்/ சங்கங்கள் போராடவில்லை?

இந்த பிரச்சனையினால் எவ்வித அரசியல் ஆதாயமும் பெற முடியாது என்பதாலா?

நீதி மன்ற உத்தரவிற்கு பின்பாவது விடிவு பிறக்குமா என்று பார்ப்போம்!

Tuesday, September 1, 2009

கருப்பு பணம் - இந்தியா திரும்புமா?


நாடகமாடும் மத்திய அரசு !

கறுப்புப் பண விவகாரம்: டிசம்பரில் இந்தியா-ஸ்விட்சர்லாந்து பேச்சு
First Published : 01 Sep 2009 12:19:09 AM IST


புது தில்லி, ஆக. 31: ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஸ்விட்சர்லாந்துடன் இந்தியா பேச்சு நடத்த உள்ளது. இரு நாடுகளிடையிலான பேச்சு வார்த்தை இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறும் என தெரிகிறது.

கறுப்புப் பண முதலைகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் புகலிடமாக இருப்பது ஸ்விட்சர்லாந்துதான். அங்குள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர் பற்றிய விவரம் தெரிவிக்க வேண்டிய அவசியமேயில்லை. இதனாலேயே உலகில் பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த கறுப்புப் பண பதுக்கல்காரர்களின் சொர்க்க புரியாக ஸ்விட்சர்லாந்து வங்கிகள் திகழ்கின்றன. சர்வதேச பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடும், தங்களது நாட்டைச் சேர்ந்த வர்கள் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள தொகையை தங்கள் சொந்த நாட்டுக்கு மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அமெரிக்கா விடுத்த கோரிக்கையின்படி அந்நாட்டைச் சேர்ந்தவர்களின் பட்டியலைத் தர ஸ்விட்சர்லாந்து முன்வந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், ஆயுத தரகர்கள் ஆகியோர் ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தைக் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இதனிடையே கறுப்புப் பணத்தைத் தேடி ஸ்விட்சர்லாந்துக்கு வர வேண்டாம் என கடந்த வாரம் அந்நாட்டு வங்கிகள் தெரிவித்துள்ளன. இத்தகைய சூழலில் இந்திய நிதித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக முதல் சுற்று பேச்சு வார்த்தையை தொடங்கஉள்ளனர்.

பொருளாதார மேம்பாட்டுக்கு கூட்டாக செயல்படுவதற்காக ஸ்விட்சர்லாந்துடன் போடப்பட்ட இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு முறை ஒப்பந்த அடிப்படையில் கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பேச்சு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு சந்தேகம்!

இத்தாலிய தொழில் அதிபர் கொட்டரோச்சியை காப்பாற்றுவதற்காக, இண்டர்போலால் வெளி நாட்டு பயனத்தின் போது கைதுசெய்யப்பட்ட அவர் மீது, இந்தியாவில் வழக்கு எதுவும் கிடையாது என அங்கு சென்று பொய் சொல்லி விடுவித்தது, வெளியுறவுத்துறை மற்றும் சி.பி.ஐ. இந்நிலையில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பெயரில் சுவிச்சர்லாந்தில் கருப்பு பண கணக்கு உண்டு என ஆதாரத்துடன் வெளியான தகவலை அடுத்து சுப்பிரமணிய சாமியால் உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்குக்கே, ஆரசு நடவடிக்கை எடுக்கவில்லை. விபரத்திற்கு கிழ்கண்ட வெப் சைட்டுக்கு சென்று பார்க்கவும்.

http://vivekajyoti.blogspot.com/2009/05/swiss-authorities-in-1991-came-to-know.html

இந்நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுப்போம் என கூறுவது ஏமாற்று வேலை தான் !.